/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏரி இடத்தில் கால்வாய் பணி தடுத்து நிறுத்திய நீர்வளத்துறை
/
ஏரி இடத்தில் கால்வாய் பணி தடுத்து நிறுத்திய நீர்வளத்துறை
ஏரி இடத்தில் கால்வாய் பணி தடுத்து நிறுத்திய நீர்வளத்துறை
ஏரி இடத்தில் கால்வாய் பணி தடுத்து நிறுத்திய நீர்வளத்துறை
ADDED : ஜன 28, 2025 12:49 AM
சிட்லப்பாக்கம், ஜன. 28-
சிட்லப்பாக்கம் வரதராஜா தியேட்டர் சந்திப்பை, தினசரி ஆயிரக்கணக்கானோர், லட்சக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன.
இந்த சந்திப்பை ஒட்டிய பகுதி, சிட்லப்பாக்கம் ஏரியில் அடங்கியது. நீதிமன்ற உத்தரவின்படி, சந்திப்பை ஒட்டி, ஒரு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை, பொதுப்பணித் துறையினர் அதிரடியாக அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தை சுற்றி, கம்பி வேலி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுப்பணித்துறையால் மீடக்கப்பட்ட ஏரி இடத்தில், 'ரவுண்டானா' அமைக்க திட்டமிட்டு, நீர்வளத்துறையிடம் அனுமதி பெறாமல், சாலை மற்றும் கால்வாய் கட்டும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இதை அறிந்த நீர்வளத்துறை அதிகாரிகள், சில நாட்களுக்கு முன், அந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நீர்வளத்துறையிடம் அனுமதி பெறாமல் நடந்த கால்வாய் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் சென்ற பின், இரவோடு இரவாக பள்ளத்தை தோண்டி, கம்பி கட்டி ஜல்லி கொட்டி, நெடுஞ்சாலை துறையினர் கட்டுமானப் பணியை துவக்கினர்.
ஏற்கனவே, சேலையூர் - மாடம்பாக்கம் சாலையில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில், அத்துறையிடம் அனுமதி பெறாமல், நெடுஞ்சாலைத் துறையினர் கால்வாய் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, அதேபோல், நீர்வளத்துறையிடம் அனுமதி பெறாமல், ஏரி இடத்தில் கால்வாய் கட்டும் பணி நடக்கிறது.
மேலும், மற்றொரு துறைக்கு சொந்தமான நிலம் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட துறையின் வழிகாட்டுதல் படி, முறையான அனுமதி பெற வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறையினர் கூறியதாவது:
அந்த இடம் ஏரிக்கரைக்கு மேல்பகுதியில் உள்ளது. அதோடு தண்ணீர் செல்லும் பாதையும் இல்லை.அதனால், ஒரு திட்டத்திற்கு பயன்படுத்துவது என்பது தவறில்லை. நீர்வளத்துறையிடம் வாய்மொழியாக கூறிவிட்டுத் தான் கால்வாய் பணி துவங்கப்பட்டது. அவர்கள் பணியை நிறுத்திவிட்டனர். முறையான அனுமதி பெற்று பணி தொடரும்.
இவ்வாறு கூறினர்.

