/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரியம் அரைகுறை பணியால் சாலை உள்வாங்கி மின்மாற்றி தடுப்பு சேதம்
/
குடிநீர் வாரியம் அரைகுறை பணியால் சாலை உள்வாங்கி மின்மாற்றி தடுப்பு சேதம்
குடிநீர் வாரியம் அரைகுறை பணியால் சாலை உள்வாங்கி மின்மாற்றி தடுப்பு சேதம்
குடிநீர் வாரியம் அரைகுறை பணியால் சாலை உள்வாங்கி மின்மாற்றி தடுப்பு சேதம்
ADDED : நவ 17, 2025 03:28 AM

வில்லிவாக்கம்: குடிநீர் வாரியம் தோண்டிய பள்ளத்தை முறையாக சீரமைக்காததால், சாலை உள்வாங்கி, புதிதாக அமைத்த மின்மாற்றி தடுப்பு வேலி சேதமடைந்துள்ளது.
அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில், வில்லிவாக்கம் சிட்கோ நகர் உள்ளது. மாநகராட்சி மயானம் அருகில் உள்ள இதன், இரண்டாவது பிரதான சாலையில், குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
சிட்கோ இன்டஸ்ட்ரியல் சாலை என அழைக்கப்படும் இச்சாலையில் இரு மாதங்களுக்கு முன், மின்மாற்றியை சுற்றி, மாநகராட்சி சார்பில், சுவருடன் வண்ண தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
இப்பகுதி குடிநீர் வாரியத்தில், சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாயில் அடைப்பு பிரச்னை இருந்துள்ளது. அதற்காக, மின்மாற்றியை ஒட்டிய சாலையோரத்தில், 10 மீட்டருக்கு மேல் பள்ளம் தோண்டி, வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மின்மாற்றியைச் சுற்றி அமைத்த தடுப்பு வேலி சுவருடன் சாலையில் உள்வாங்கியுள்ளது. இதனால், மின்மாற்றியின் தடுப்பு கம்பி வேலியும் சேதமடைந்தது. இவற்றை முறையாக சீரமைக்காமல், பள்ளத்தை மட்டும் ஊழியர்கள் மூடிவிட்டு சென்றனர்.
தற்போது, மழைக்காலம் என்பதால், சாலை மேலும் உள்வாங்கி, மின்மாற்றி மீது தடுப்பு வேலி சாய்ந்து விபத்து அபாயம் நிலவுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

