UPDATED : நவ 14, 2026 08:17 PM
ADDED : நவ 14, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
அம்பத்துார்: குடிநீர் விநியோகப் பிரச்னையால் ஆத்திரமடைந்த மக்கள், குடிநீர் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அம்பத்துார் மண்டலம், பாடி தேவர் நகர், டி.வி.எஸ்., பிரதான சாலையில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவால் மண் அரிப்பு ஏற்பட்டு, அடுத்தடுத்து இருமுறை பள்ளம் உருவானது.
இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது; குழாய் கசிவை ஊழியர்கள் சரிசெய்தனர்.
எனினும் குறைந்த அழுத்தத்தில் குடிநீர் வினியோகிக்கப்பட்டதால், சில வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள், குடிநீர் வாரிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். ஊழியர்கள் பிரச்னையைக் கண்டறிந்து சரிசெய்ததை தொடர்ந்து, மக்கள் கலைந்து சென்றனர்.
