/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூன்று மண்டலங்களில் 2 நாள் குடிநீர் சப்ளை ரத்து
/
மூன்று மண்டலங்களில் 2 நாள் குடிநீர் சப்ளை ரத்து
ADDED : மார் 26, 2025 11:50 PM
சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில், மெட்ரோ ரயில் பணிக்காக, குடிநீர் குழாய் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதனால், கீழ்ப்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தென் சென்னை ஆகிய குடிநீர் பகிர்மான நிலையங்கள், 29, 30ம் தேதிகளில் செயல்படாது.
இதன் காரணமாக, தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட சூளைமேடு, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், கோபாலபுரம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், தி.நகர், அசோக் நகர், கே.கே. நகர் ஆகிய பகுதிகள்;
அடையாறு மண்டலத்தில் சைதாப்பேட்டை ஆகிய பகுதியிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசர குடிநீர் தேவைக்கு, 044 - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
***