/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் மாதவரத்தில் போக்குவரத்து பாதிப்பு
/
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் மாதவரத்தில் போக்குவரத்து பாதிப்பு
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் மாதவரத்தில் போக்குவரத்து பாதிப்பு
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் மாதவரத்தில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 16, 2025 12:21 AM

மாதவரம், குழாயில் உடைப்பு ஏற்பட்டு, மாதவரம் ஜி.என்.டி., சாலையில் குடிநீர் ஆறாக ஓடியது. சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால், நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சென்னைக்கு ராட்சத குழாய்கள் வழியாக, குடிநீர் அனுப்பப்படுகிறது. மூலக்கடையில் இருந்து மாதவரம் ரவுண்டானா செல்லும் ஜி.என்.டி., சாலையில், கணபதி தோட்டம் அருகே, குழாயில் நேற்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டது.
குடிநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இதனால், அரிப்பு ஏற்பட்டு சாலை பள்ளமானதால் வாகன போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
மூன்று மணி நேரத்திற்கு மேல் குடிநீர் வீணாக வெளியேறிய நிலையில், குடிநீர் வாரிய அதிகாரிகள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலையில் ஆங்காங்கே ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டி, தனியார் நிறுவனங்களின் இன்டர்நெட் கேபிள் பதிக்கும் வேலை நடந்து வருகிறது.
மற்ற துறைகளின் கேபிள், குடிநீர் குழாய் போன்ற விஷயங்களை பற்றி கவலைப்படாமல், இஷ்டம்போல் தோண்டுவதால், இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதை, மாநகராட்சி நிர்வாகம் முறைப்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

