UPDATED : ஆக 24, 2026 03:13 AM
ADDED : ஆக 24, 2026 03:12 AM

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில், 'வீ த லீடர்ஸ்' இயக்கம் சார்பில், கடற்கரை துாய்மை பணி முகாம் நடந்தது.
பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள 'வீ த லீடர்ஸ்' மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நளினி ஸ்ரீ தலைமை வகித்தார். இயக்கத்தின் நிர்வாகி வினோத், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
நிகழ்ச்சியில், 100 பேருக்கு மட்டுமே காவல் துறை அனுமதி அளித்திருந்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து உற்சாகத்துடன் பங்கேற்றனர். நிகழ்வில், 84 வயது மூதாட்டி ஜெயலட்சுமி, அனைவரையும் வரவேற்று துாய்மை பணியை தொடங்கி வைத்தார்.
இயக்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், 'காவல் துறை கட்டுப்பாடு, நேரக்கெடு ஆகியவற்றை தாண்டி, பொதுமக்கள் காட்டிய அன்பும் ஆதரவுமே மக்கள் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி' என்றனர்.
