/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.56 லட்சம் நகைகளுடன் மேற்கு வங்க நபர் 'எஸ்கேப்'
/
ரூ.56 லட்சம் நகைகளுடன் மேற்கு வங்க நபர் 'எஸ்கேப்'
ADDED : பிப் 15, 2025 09:01 PM
ஓட்டேரி:அண்ணாநகர் கிழக்கு, புதிய வ.உ.சி., காலனியைச் சேர்ந்தவர் ஷேக் சம்சு அலம், 48. இவர், ஓட்டேரி, படவட்டம்மன் கோவில் தெருவில், 'அருண் ஜுவல்லரி' என்ற பெயரில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.
சுழற்சி முறையில், இவரது கடையில் 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அப்துல் நசீம், 28, என்ற வாலிபர் மூன்று ஆண்டுகளாக, பட்டறையில் பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில், 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் தங்க நகைகளை, மெருகேற்றுவதற்காக ஷேக் சம்சு அலம் கொடுத்துள்ளார்.
சிறிது நேரம் கழிந்த நிலையில், சிகரெட் பிடித்து வருவதாக கூறி அப்துல் நசீம் வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் கடைக்கு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த உரிமையாளர் ஷேக் சம்சு அலம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் தங்க நகைகளுடன் அப்துல் நசீம் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்தவர், உடனே ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

