/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கற்களை கொட்டி பாதை அடைப்பு மக்கள் என்ன செய்வர் ஆபீசர்ஸ்?
/
கற்களை கொட்டி பாதை அடைப்பு மக்கள் என்ன செய்வர் ஆபீசர்ஸ்?
கற்களை கொட்டி பாதை அடைப்பு மக்கள் என்ன செய்வர் ஆபீசர்ஸ்?
கற்களை கொட்டி பாதை அடைப்பு மக்கள் என்ன செய்வர் ஆபீசர்ஸ்?
ADDED : அக் 09, 2025 02:38 AM

புத்தகரம், குளம் சீரமைப்பு பணிகளுக்கான கற்கள் பாதையை அடைத்து குவிக்கப்பட்டுள்ளதால், பகுதிமக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனே கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட 32வது வார்டில், காமராஜர் நகர் விரிவு முதல் தெரு அருகே உள்ள குளம் மற்றும் கிரேஸ் நகர் செல்லும் இணைப்பு சாலை, பராமரிப்பின்றி கிடந்தது.
கடந்த மூன்று மாதத்திற்கு முன் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து பணிகளை துவங்கிய மாநகராட்சி, கடந்த மாதம் பணிகளை அரைகுறையாக பாதியிலேயே கிடப்பில் போட்டது. இந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன் குளத்தின் கரை அமைக்க இரண்டு லாரிகளில் பெரிய அளவிலான பாறாங்கற்களை கொண்டு வந்து, சாலையில் கொட்டிச் சென்றுள்ளனர். ஆனால், நேற்று வரை எந்த பணியும் நடக்கவில்லை.
இதனால், பகுதி மக்கள் வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிலர் தங்கள் வாகனங்களை, திருட்டு பயத்துடன் பாதி வழியிலேயே நிறுத்தி செல்கின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் எந்த பதிலும் தரவில்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆய்வு செய்து பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.