/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வீல் சேர்' தட்டுப்பாடு ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
/
'வீல் சேர்' தட்டுப்பாடு ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
'வீல் சேர்' தட்டுப்பாடு ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
'வீல் சேர்' தட்டுப்பாடு ஏர்போர்ட்டில் பயணியர் அவதி
ADDED : செப் 29, 2025 02:31 AM
சென்னை: சென்னை விமான நிலையத்தில், முதியோரை கூட்டிச்செல்ல 'வீல் சேர்' கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விமான நிலையங்களில், முதியோர், கர்ப்பிணியர், உடல்நிலை சரியில்லாதோரை உட்கார வைத்து அழைத்துச் செல்ல, 'வீல் சேர்' பயன்படுகிறது. இது, அனைத்து முனையங்களிலும், எளிமையாக பயன்படுத்தும் வகையில் இருக்கும்.
ஆனால், சென்னை விமான நிலையத்தில், பயணியர் வாய் திறந்து கேட்டாலும் அத்தியாவசியமான 'வீல் சேர்' கிடைப்பதில்லை. வீல் சேர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பயணியர் கூறியதாவது:
டில்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தந்தையுடன் வந்தேன். தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டவர். 'ஏரோபிரிட்ஜ்' வழியாக முனையத்திற்குள் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு 'வீல் சேர்' தேவைப்பட்டது.
விமான நிலைய ஆணைய அதிகாரிகளிடம் சொன்னதற்கு, நீண்ட நேரம் காக்க வைத்து, அதன் பின் வீல் சேர் வழங்கினர்.
விமான நிலையங்களில், பயணியர் எளிமையாக பயன்படுத்தும் வகையில் சேவைகள் இருக்க வேண்டும். இங்கு அத்தியாவசிய தேவைக்கே போராட வேண்டி இருக்கிறது. இப்பிரச்னைக்கு, விமான நிலைய இயக்குனர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.