/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எப்போது தான் விடிவு பிறக்குமோ! பம்மல் சாலையில் வாகன ஓட்டிகள் ஏக்கம்

ADDED : நவ 16, 2024 12:41 AM

பம்மல், தாம்பரம் மாநகராட்சியில் அடங்கிய பம்மல் - அனகாபுத்துார் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
சாலைகளில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் இடங்களில், பணிகள் முடிந்த பின், பள்ளத்தை முறையாக மூடாததால், அவை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிடுகின்றன.
லேசான மழை பெய்தாலே, மரண பள்ளங்களாகவும், சேறும், சகதியுமாகவும் மாறி, வாகன ஓட்டிகள் சிரமத்தை அனுபவிக்கின்றனர். அப்படியே சென்றாலும், சேற்றில் சிக்கி விழுவதும், காயமடைவதும் நடக்கிறது.
குறிப்பாக, முதியோர், மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதைபோலவே, பல்லாவரம் - குன்றத்துார் சாலையும், படுமோசமாகவே உள்ளது.
அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், தினமும் மூச்சுத்திணறல், முதுகுவலி, தலைவலி போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
அதனால், உயர் அதிகாரிகள் இப்பிரச்னையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, பணி முடிந்த உட்புற சாலைகளையும், பல்லாவரம் - குன்றத்துார் சாலையையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.