/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எதில் சிக்கினால் யார் காப்பாற்றுவர்கள்? இலாகா பிரச்னையால் நாய் மரணம்
/
எதில் சிக்கினால் யார் காப்பாற்றுவர்கள்? இலாகா பிரச்னையால் நாய் மரணம்
எதில் சிக்கினால் யார் காப்பாற்றுவர்கள்? இலாகா பிரச்னையால் நாய் மரணம்
எதில் சிக்கினால் யார் காப்பாற்றுவர்கள்? இலாகா பிரச்னையால் நாய் மரணம்
ADDED : மே 16, 2025 12:44 AM
சென்னை,சென்னை, சைதாப்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதரில் சிக்கி நாய் உயிரிழந்தது. தகவல் தெரிவித்தும், இலாகா பிரச்னையால் நாயை காப்பற்ற முன் வராதது அப்பகுதியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, சைதாப்பேட்டையில், அரசு கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. மருத்துவமனையை சுற்றி, செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டிய நிலையில் உள்ளது.
அப்பகுதியில் சாலையின் அருகில் உள்ள புதரில், கழுத்தில் சிவப்பு நிற பட்டை அணிந்த நாய் ஒன்று, உடல் நிலை சரியில்லாத நிலையில் சிக்கி தவித்தது.
அப்பகுதியில் இருந்தோர் அதை காப்பாற்ற முயன்றும், நாயை வெளியில் எடுக்க முடியவில்லை. அரசு துறைகளுக்கு தெரிவித்தும், யாரும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாததால், நாய் உயிரிழந்தது.
இது குறித்து, நாயை காப்பற்ற முயன்றவர்கள் கூறியதாவது:
நாய் சிக்கியது குறித்து, அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தோம்.
'மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் மட்டுமே நாய்க்கு சிகிச்சை அளிக்க முடியும். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவியுங்கள்; அவர்கள் காப்பாற்றுவர்' என்றனர்.
பின், தீயணைப்பு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட போது, 'கம்பி அல்லது இடிபாடுகளில் சிக்கி இருந்தால் மட்டும் தான், மீட்பு பணியில் ஈடுபடுவோம். புதரில் நாய் சிக்கியிருப்பதால், வனத்துறைக்கு தகவல் தெரிவியுங்கள்' என்றனர்.
வனத்துறைக்கு தகவல் தெரிவித்த போது, 'இது எங்கள் பணி அல்ல; புளூகிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவியுங்கள்' என்றனர்.
'புளுகிராஸ்' அதிகாரியை தொடர்பு கொண்ட போது, 'இதற்கு எங்களை ஏன் அழைக்கிறீர்கள். அருகிலேயே கால்நடை மருத்துவமனை உள்ளபோது, அவர்கள் பார்த்து கொள்வர். இல்லையெனில், நான்கு பேரை துணைக்கு சேர்த்து, நீங்களே மருத்துவமனைக்கு துாக்கி செல்லுங்கள்' என்றனர்.
இறுதி வரை, எந்த அரசு துறையும், நாயை காப்பாற்ற முன் வராததால், அது இறந்து விட்டது. இது தொடர்பாக யார் நடவடிக்கை எடுக்கப்போகின்றனர் என்றும் தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.