/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் கணவர் கண்முன்னே லாரி சக்கரம் ஏறி மனைவி பலி
/
விபத்தில் கணவர் கண்முன்னே லாரி சக்கரம் ஏறி மனைவி பலி
விபத்தில் கணவர் கண்முன்னே லாரி சக்கரம் ஏறி மனைவி பலி
விபத்தில் கணவர் கண்முன்னே லாரி சக்கரம் ஏறி மனைவி பலி
ADDED : பிப் 14, 2025 12:24 AM
மாதவரம்,
மாதவரம், திருமலை நகர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் திருமலையா. இவரது மனைவி கோடீஸ்வரி, 38. ஊறுகாய் வியாபாரம் செய்து வந்தனர்.
மணலி செல்வதற்காக, நேற்று மாதவரத்தில் இருந்து இருவரும் பைக்கில் புறப்பட்டனர்.
மாதவரம் -- மணலி 200 அடி சாலை மேம்பாலத்தின் கீழ் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி இவர்களது பைக் மீது மோதியது. இதில், வாகனத்துடன் தம்பதி கீழே விழுந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில், கணவர் கண்முன் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, கோடீஸ்வரி உயிரிழந்தார்.
காயமடைந்த திருமலையாவை, அங்கிருந்தோர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திண்டுக்கல்லைச் சேர்ந்த முருகன், 44, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.