/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கணவர் கண் முன் விபத்தில் மனைவி பலி
/
கணவர் கண் முன் விபத்தில் மனைவி பலி
ADDED : ஆக 22, 2025 12:32 AM
திருமங்கலம், திருமங்கலம் மேம்பாலத்தில், நேற்று நடந்த விபத்தில் கணவர் கண் முன் மனைவி பலியானார்.
ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் ஜெயராஜ், 60, அவரது மனைவி தேவகி, 57. இருவரும் கூலி தொழிலாளர்கள். தம்பதி, நேற்று காலை, 'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபெட்டில், மாதவரம் சென்றனர். திருமங்கலம் மேம்பாலத்தில் செல்லும் போது, அதேவழியில் பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம், ஜெயராஜ் மொபெட்டில் உரசியுள்ளது. நிலைத்தடுமாறி, ஜெயராஜ் மற்றும் அவரது மனைவி கீழே விழுந்தனர்.
இதில், சரக்கு வேன் பின்பக்க சக்கரத்தில் தேவகியின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே கணவன் கண்முன்னே துடித்துடித்து இறந்தார்.
அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தின் ஓட்டுனர், சோழவரத்தை சேர்ந்த மணி, 50 என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

