ADDED : ஜன 30, 2025 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி,: மணலி, சின்னசேக்காடு, பல்ஜிபாளையம் 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா, 60; கருவாடு வியாபாரி. இவரது மனைவி சவுந்தரவல்லி, 53. இவர்கள் இரு மகள்களுக்கு திருமணமாகி தனியே வசிக்கின்றனர். ஒரு மகன் - மகளுடன் தம்பதி வசித்து வந்தனர்.
நேற்று இரவு மகாராஜா குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது, தம்பதியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மகாராஜா, மனைவி சவுந்தரவல்லியை, கழுத்து மற்றும் நெற்றியில், சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகாராஜா, மணலி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

