/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியை கொன்று குப்பை கிடங்கில் புதைப்பு தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுப்பு
/
மனைவியை கொன்று குப்பை கிடங்கில் புதைப்பு தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுப்பு
மனைவியை கொன்று குப்பை கிடங்கில் புதைப்பு தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுப்பு
மனைவியை கொன்று குப்பை கிடங்கில் புதைப்பு தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுப்பு
ADDED : ஜூலை 23, 2025 12:30 AM

சென்னை :நடத்தையில் சந்தேகமடைந்த கணவர், மனைவியை கொலை செய்து குப்பை கிடங்கில் புதைத்தார். தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
சென்னை பட்டினபாக்கத்தைச் சேர்ந்த நவீன், 30, இவரது மனைவி லட்சுமி, 26, தம்பதி பெருங்குடி குப்பை கிடங்கில், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சேகரித்து விற்பனை செய்து வந்தனர். அங்கேயே கொட்டகை அமைத்து தங்கினர்.
நேற்றுமுன்தினம், தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில், நவீன் தாக்கியதில், லட்சுமி சுருண்டு விழுந்து இறந்தார். மனைவியின் உடலை, குப்பை கிடங்கில் புதைத்தார்.
பின், மது அருந்தும்போது நடந்த சம்பவத்தை நண்பர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். நண்பர்களில் ஒருவர், துரைப்பாக்கம் போலீசில் கூறிய தகவலையடுத்து, போலீசார் நவீனை கைது செய்தனர். சோழிங்கநல்லுார் தாசில்தார் இலக்கியா முன்னிலையில், நேற்று, லட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசார் கூறியதாவது:
லட்சுமி நடத்தை மீது நவீனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின்போது, லட்சுமிக்கு யாரோ மொபைல் போனில் தொடர்பு கொண்டனர்.
இது குறித்து நவீன் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், கையால், லட்சுமியின் தலையில் பலமாக தாக்கியதில் கீழே சுருண்டு விழுந்தார். இறந்து விட்டார் என நினைத்த நவீன், குப்பையில் குழிதோண்டி லட்சுமியை புதைத்தார்.
இறந்து விட்டார் என, எப்படி உறுதி செய்தாய் என கேட்டதற்கு நவீனிடம் பதில் இல்லை. உயிர் இருக்கும்போதே புதைத்தாரா அல்லது இறந்தபின் புதைத்தாரா என, பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.