/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி பேருந்து மோதியதில் மனைவி பலி; கணவர் படுகாயம்
/
கல்லுாரி பேருந்து மோதியதில் மனைவி பலி; கணவர் படுகாயம்
கல்லுாரி பேருந்து மோதியதில் மனைவி பலி; கணவர் படுகாயம்
கல்லுாரி பேருந்து மோதியதில் மனைவி பலி; கணவர் படுகாயம்
ADDED : மே 01, 2025 11:48 PM
பள்ளிக்கரணை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர், 40. இவரது மனைவி அகல்யா, 36. இவர்கள், வேளச்சேரி, அண்ணா நகரில் வசித்து வந்தனர். சுரேந்தர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் மாலை இருவரும், புது புல்லட் பைக்கில் பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரில் உள்ள பைக் ஷோரூமிற்கு சென்று கொண்டிருந்தனர்.
ஷோரூம் அருகே சென்றபோது, வேகமாக வந்த தனியார் கல்லுாரி பேருந்து சுரேந்தரின் புல்லட் பைக்கின் பின்னால் மோதியது. இதில், சுரேந்தர் - அகல்யா தம்பதியினர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகல்யா உயிரிழந்தார்.
சுரேந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து, பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.