/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி தாக்கியதில் மனைவியின் முன்னாள் காதலன் உயிரிழப்பு
/
ரவுடி தாக்கியதில் மனைவியின் முன்னாள் காதலன் உயிரிழப்பு
ரவுடி தாக்கியதில் மனைவியின் முன்னாள் காதலன் உயிரிழப்பு
ரவுடி தாக்கியதில் மனைவியின் முன்னாள் காதலன் உயிரிழப்பு
ADDED : அக் 07, 2025 12:47 AM
வில்லிவாக்கம் ரவுடி தாக்கியதில், மனைவியின் முன்னாள் காதலன் உயிரிழந்தார்.
வில்லிவாக்கம், தாந்தோனிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார், 26. இவர், காதலித்த பெண்ணை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ராஜேஷ், 30 என்பவர் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி இரவு, மது போதையில் முன்னாள் காதலியின் வீட்டிற்கு சென்ற சசிகுமார், காதலியை பெயர் கூறி அழைத்ததாக தெரிகிறது.
அப்போது, வீட்டிற்கு போதையில் வந்த ராஜேஷுக்கும், சசிகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ராஜேஷ், சசிகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த சசிகுமார், சம்பவ இடத்திலேயே மயங்கினார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரை அடுத்து வில்லிவாக்கம் போலீசார் விசாரித்து, ராஜேஷை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த சசிகுமார், நேற்று அதிகாலை உயிரிழந்தார்.