/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.21.69 கோடி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
/
ரூ.21.69 கோடி மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
ADDED : அக் 07, 2025 12:46 AM
சென்னை, சென்னையில், பல்வேறு வகையில் 'ஆன்லைன்' மூலம் பணம் இழந்தவர்களின் புகார்களை, சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த செப்டம்பர் மாதம், ஏராளமானோர் புகார் அளித்தனர். இதில் 46 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 56.12 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை முழுதிலும் இருந்து மொத்தமாக, 121 புகார்தாரர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, 1.27 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் இதுவரை, 21.69 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.