/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகிங்ஹாமில் அனுமதியின்றி கொட்டப்படும் கழிவுநீர் தீர்வு காண ஒருங்கிணைந்த குழு அமைக்கப்படுமா?

ADDED : ஏப் 13, 2025 09:29 PM
திருவொற்றியூர்:சென்னையில், 42 கி.மீ., துாரத்திற்கு ஓடும் பகிங்ஹாம் கால்வாய், வடசென்னையில், திருவொற்றியூர் குப்பை மேடு - எண்ணுார் முகத்துவாரம் வரை, 6 கி.மீ., துாரத்திற்கு ஓடி வங்க கடலுடன் கலக்கிறது.
வடசென்னையை வெள்ளப் பாதிப்பில் இருந்து காக்கும் பகிங்ஹாம் கால்வாய், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பால், கருப்பாக மாறி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இரு ஆண்டுகளுக்கு முன் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆயில் கழிவுகளால், இந்த நீர்வழித்தடம் பாழாய் போனது.
அதன்பின், பகிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் கலப்பு விவகாரம் சற்றே ஓய்ந்திருந்தது.
இந்நிலையில், சில தினங்களாக இரவு நேரங்களில், லாரிகளில் ஆசிட் உள்ளிட்ட கழிவு நீரை லாரிகளின் கொண்டு வரும் மர்ம நபர்கள், பொக்லைன் ஏறும் வழித்தடம் வழியாக, சர்வ சாதாரணமாக, கால்வாய்க்குள் கொட்டிச் செல்கின்றனர்.
இதற்கு யார் பொறுப்பேற்பது என்று தெரியாததால், நாளுக்கு நாள் இந்த விவகாரம் விஸ்வரூம் எடுக்கிறது.
பகிங்ஹாம் கால்வாயில் கொட்டப்படும் கழிவுநீரால் மாசு ஏற்படுகிறது. எனவே, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா ; கால்வாயை நீர்வளத்துறை பராமரிப்பதால், நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா அல்லது, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதில் குழப்பம் உள்ளது. எனவே, மூன்று துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து, இந்த கழிவுநீர் கொட்டப்படும் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், குழு அமைத்திட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.