/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திடக்கழிவு மேலாண் ஒப்பந்த லாரிகளில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படுமா?

ADDED : ஜூன் 25, 2025 12:22 AM

சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில், 50க்கும் மேற்பட்ட லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றில் எதிலுமே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படவில்லை. இதனால் லாரி ஓட்டுநர்கள் வேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
சென்னையில் தற்போது காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, கனரக வாகனங்கள் பொது சாலையில் செல்ல தடை உள்ளது.
ஆனால், சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட ஒப்பந்த லாரிகளுக்கு எந்த தடையும் இல்லாததால், 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக வேளை நேரங்களில் தாறுமாறாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்ட வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.