/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தடுப்பு மணல் மூட்டைகள் சேதம் விரைவு சாலை தாக்குப்பிடிக்குமா?
/
தடுப்பு மணல் மூட்டைகள் சேதம் விரைவு சாலை தாக்குப்பிடிக்குமா?
தடுப்பு மணல் மூட்டைகள் சேதம் விரைவு சாலை தாக்குப்பிடிக்குமா?
தடுப்பு மணல் மூட்டைகள் சேதம் விரைவு சாலை தாக்குப்பிடிக்குமா?
ADDED : செப் 22, 2025 03:16 AM

எண்ணுார்: தாழங்குப்பம் கடற்கரையில், கடல் அரிப்பை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சேதமாகி விட்டதால், வரும் பருவமழை காலத்தில், எண்ணுார் விரைவு சாலை, மேலும் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எண்ணுார், தாழங்குப்பம் கடற்கரை வழியாக, 50க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீனவர்கள், ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவர்.
மேலும், மணற்பரப்பாக இருப்பதால், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், மாலை மற்றும் விடுமுறை தினங்களில், அங்கு கூடி, பொழுதை போக்கி செல்வர்.
இந்நிலையில், கடல் சீற்றம், புயல் காரணமாக, தாழங்குப்பம் கடற்கரையை ஒட்டிய எண்ணுார் விரைவு சாலையில், தார் சாலை அரிக்கப்பட்டு சேதம் ஏற்பட்டது.
இதற்கு தீர்வாக, குறிப்பிட்ட துாரம் மட்டும், கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர், தற்காலிகமாக தடுப்பு மணல் மூட்டைகள் அமைத்து, கடற்கரையில் தார்ச்சாலைக்கு முட்டுக் கொடுத்தனர்.
ஆனால், கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு அந்த மணல் மூட்டைகள் அனைத்தும் சேதமாகி உள்ளன. தற்போது, இந்த இடம் மிகவும் பலவீனமாக உள்ளது.
இதனால் வரவிருக்கும் பருவமழையால், அடுத்தடுத்து புயல் எச்சரிக்கை எதிர்பார்க்கப்படும் நிலையில், கடல் சீற்றம் காரணமாக, எண்ணுார் விரைவு சாலை முற்றிலும் அரித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.