/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சூளை பெருமாள் கோவிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
/
சூளை பெருமாள் கோவிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
சூளை பெருமாள் கோவிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
சூளை பெருமாள் கோவிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
ADDED : மார் 11, 2024 01:33 AM

சூளை:சூளை, வி.வி., கோவில் தெருவில், கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 78வது வார்டில், வி.வி.கோவில் தெருவில் சர்வே எண். 2018/3ல் உள்ள இக்கோவில் வளாகம் 5,120 சதுர அடியில் அமைந்துள்ளது. கோவில் 1,325 சதுர அடியில் உள்ளது. தற்போது, கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
இது குறித்து, ஹிந்து முன்னணியின் எழும்பூர் தொகுதி பொதுச்செயலர் முருகதாஸ் கூறியதாவது:
சுற்றி வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால், கோவிலுக்கு செல்லும் வழி குறுகி, 3 அடி சந்தாக மாறியுள்ளது. 'ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவிலை சீரமைக்க வேண்டும்' என, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்தும், ஹிந்து சமய அறநிலையத்துறை கண்டுகொள்ளவே இல்லை.
ஆக்கிரமிப்பு ஒருபுறம் இருக்க, கோவிலில் பூஜை மற்றும் பராமரிப்பும் நடக்கவில்லை. கோவில் கோபுர சிலை முற்றிலும் சிதிலமடைந்து, காணாமல் போய் உள்ளது.
கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கடந்த 2005ல் மனு அளித்தபோது, கோவிலின் மொத்த இடம் குறித்த உண்மை தகவல் வெளியானது. கோவிலை மீட்டு, மீண்டும் பழையபடி பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்கள் கட்சி சார்ந்துள்ளதால், நடவடிக்கை எடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முனைப்பு காட்டவில்லை. அமைச்சரின் வீட்டுக்கு 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவில் இடத்தை அவரால் மீட்க முடியவில்லை. தற்போது பெயர் பலகையை மட்டும் வைத்துள்ளனர். கோவிலை முற்றிலும் மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

