/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கல்லா'வை கவனிக்கும் போலீசார் கடமையையும் கவனிப்பரா?
/
'கல்லா'வை கவனிக்கும் போலீசார் கடமையையும் கவனிப்பரா?
'கல்லா'வை கவனிக்கும் போலீசார் கடமையையும் கவனிப்பரா?
'கல்லா'வை கவனிக்கும் போலீசார் கடமையையும் கவனிப்பரா?
ADDED : அக் 19, 2024 12:34 AM
செங்குன்றம்லாரி ஓட்டுனர்களை, 'கல்லா' கட்ட வைப்பதில் மட்டும் சுறுசுறுப்பாக இயங்கும் போக்குவரத்து போலீசார், வாகன நெரிசலை கண்காணித்து தவிர்க்கும் பணியில் மெத்தனம் காட்டுவதால், பொதுமக்கள் நெரிசலில் சிக்கி, கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிக வாகனங்கள் வருகின்றன. இதில், லாரி ஓட்டுனர்கள் மது குடித்துள்ளனரா என, 'டி டி' சோதனை நடத்துவதில், செங்குன்றம் போக்குவரத்து போலீசார் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், ஜி.என்.டி., சாலையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
இரவில் மது அருந்தும் லாரி ஓட்டுனர்கள், பகலில் லாரியை எடுத்து ஓட்டும் போது, அவர்களிடம் மது பரிசோதனை நடத்தும்போது, மது குடித்ததாகவே பதிவாகிறது.
இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும், வெளிமாநில ஓட்டுனர்களே அதிகம் சிக்குகின்றனர். இவர்கள் இங்கிருந்து சென்றால் போதும் என, முடிந்தவரை 'கப்பம்' கட்டி விட்டுச் செல்கின்றனர்.
சென்னை- - ஆந்திரா போக்குவரத்திற்கான முக்கிய சாலையான, செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில் நடைபாதை கடைகள், வணிக வளாகம், மால் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதேபோல் கதிர்வேடு, புழல் சிறை மற்றும் காவாங்கரை பகுதியிலும் நெரிசல் எப்போதும் தொடர்கிறது.
எனவே, 'கல்லா' கட்ட வைப்பதில் ஆர்வம் காட்டும் போக்குவரத்து போலீசார், நெரிசலில் சிக்காமல் வாகன ஓட்டிகளை பத்திரமாக அனுப்பி வைப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

