/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுப்பொலிவு பெறுமா புழுதிவாக்கம் பஸ் நிலையம்?
/
புதுப்பொலிவு பெறுமா புழுதிவாக்கம் பஸ் நிலையம்?
ADDED : ஜன 31, 2025 11:54 PM

புழுதிவாக்கம்,புழுதிவாக்கம் பேரூராட்சியாக இருந்தபோது, 2001ல் மந்தைவெளி தெருவில், பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பின் 2008ல் 30 லட்சம் ரூபாய் மதிப்பீடில் விஸ்தரிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
தினமும் 10,000 பேர் பயன்படுத்தி வந்த நிலையில், நான்கு ஆண்டுகளில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது, ஒரு பேருந்து மட்டுமே வந்து செல்கிறது.
சமூக ஆர்வலர் கோபிநாத், 74, கூறியதாவது:
வார்டு 185க்கு உட்பட்ட உள்ளகரம், வார்டு 186க்கு உட்பட்ட புழுதிவாக்கம் பகுதிவாசிகளுக்கு இந்த பேருந்து நிலையம் பெரிதும் பயன்பட்டது.
தற்போது, உரிய பேருந்து வசதி இல்லாததால், புழுதிவாக்கம், உள்ளகரத்திலிருந்து பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே, பேருந்து நிலையத்தை சீரமைத்து, போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.