/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை சீரமைக்கப்படுமா?
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை சீரமைக்கப்படுமா?
ADDED : நவ 21, 2024 12:24 AM

சென்னை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில், சேறும் சகதியுமாக மாறியுள்ள நீதிபதி சுந்தரம் சாலையை, மாநகராட்சி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மயிலாப்பூரில், நீதிபதி சுந்தரம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மண், முறையாக அகற்றப்படாமல் சாலையிலேயே கொட்டப்பட்டுள்ளது.
அவ்வப்போது பெய்யும் மழையால் சாலை சேறும் சகதியுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் மாறியுள்ளது. இதனால், அவ்வழியாக நடந்து செல்வோர் மட்டுமின்றி, இருசக்கர வாகனத்தில் செல்வோரும், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து, பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மண்டல அதிகாரி, செயற்பொறியாளர், பொறியாளர்களை, மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டபோது, இணைப்பில் கிடைக்கவில்லை.

