/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதையில் குவிக்கப்பட்டுள்ள வடிகால் கழிவுகள் அகற்றப்படுமா?
/
நடைபாதையில் குவிக்கப்பட்டுள்ள வடிகால் கழிவுகள் அகற்றப்படுமா?
நடைபாதையில் குவிக்கப்பட்டுள்ள வடிகால் கழிவுகள் அகற்றப்படுமா?
நடைபாதையில் குவிக்கப்பட்டுள்ள வடிகால் கழிவுகள் அகற்றப்படுமா?
ADDED : அக் 13, 2024 02:18 AM
சென்னை:ஆயிரம்விளக்கு பகுதியில் மழைநீர் வடிகாலிருந்து எடுக்கப்பட்ட கழிவுகள், மூட்டை மூட்டையாக, மூன்று வாரத்திற்கு மேலாக நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 18 வார்டுகளிலும், மழைநீர் வடிகால் துார்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில், மூன்று வாரத்திற்கு முன் மழைநீர் வடிகால்கள் துார்வாரப்பட்டன. அதில் அகற்றப்பட்ட கழிவுகள், நடைபாதையிலேயே மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
'இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்' என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.