ADDED : பிப் 15, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் குளம் துார்வாரப்படுமா?
சென்னை, குன்றத்துார் அருகே கோவூரில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள குளம் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து துார்ந்துபோய் உள்ளது. மேலும், குடியிருப்புகளின் கழிவுநீர் கலந்தும், குப்பை கொட்டியும் மாசடைந்துள்ளது. இந்த குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும்.
- -என்.சக்தி, கோவூர்.

