/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உதயநிதியை வரச்சொல்லவா? கைதுக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ உதயநிதியை வரச்சொல்லவா? போதையில் லுாட்டி அடித்த ஜோடி
/
உதயநிதியை வரச்சொல்லவா? கைதுக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ உதயநிதியை வரச்சொல்லவா? போதையில் லுாட்டி அடித்த ஜோடி
உதயநிதியை வரச்சொல்லவா? கைதுக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ உதயநிதியை வரச்சொல்லவா? போதையில் லுாட்டி அடித்த ஜோடி
உதயநிதியை வரச்சொல்லவா? கைதுக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ உதயநிதியை வரச்சொல்லவா? போதையில் லுாட்டி அடித்த ஜோடி
ADDED : அக் 22, 2024 12:18 AM

சென்னை, நள்ளிரவில் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில், காரில் இருந்தபடி போதையில் லுாட்டி அடித்த ஜோடி, 'உதயநிதியை வரச்சொல்லவா; உங்களை கூண்டோடு மாத்தட்டுமா' என, போலீசாருக்கு மிரட்டல் விடுத்து தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்போது தப்பவிட்ட போலீசார், தேடி பிடித்து நேற்று கைது செய்தனர்.
சென்னை பட்டிப்பாக்கம் லுாப் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், கார் ஒன்று நின்றது. அதில், ஒரு ஆணும், பெண்ணும் மது போதையில் அதிகமாக சத்தம் போட்டு, லுாட்டி அடித்தனர். ரோந்து பணியில் ஈடுபட்ட மயிலாப்பூர் போலீசார், 'அங்கிருந்து கிளம்புங்கள்' என, அந்த ஜோடியிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஜோடி, போலீசாரிடம் எகிற துவங்கியது.
ஆபாசமாக பேச துவங்கியதால், போலீசார், 'வீடியோ' எடுத்தனர். இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஜோடி, போலீசாரை மிகவும் கேவலமாக பேசினர். குடிபோதையில் இருந்த அந்த நபர், போலீசாரை பார்த்து, 'பல்லி மூஞ்சிக்காரன்' என்றெல்லாம் உருவ கேலி செய்தார்.
அவருக்கு சற்று அசராமல், அந்த பெண்ணும், ஆணினின் கையை தோளில் போட்டு, 'செல்பி' எடுப்பது போல போஸ் கொடுத்தார்.
'நீங்கள் யார் சார்' என்று போலீசார் கேட்டபோது, 'நான் யாரா, பார்க்கிறியா, இப்ப உதயநிதியை கூப்பிடவா, விடிவதற்குள் உங்கள் அட்ரஸ் முழுவதையும் எடுத்து, கூண்டோடு மாற்றிவிடுவேன்' என, மிரட்டல் விடுத்தார்.
போலீசார், காவல் கட்டுப்பட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வர இருப்பதை அறிந்த அந்த ஜோடி, நைசாக ஒன்றன் பின் ஒன்றாக காரில் ஏறி தப்பியது. அப்போதும், அந்த போதை ஆசாமி, கண்ணாடியை கீழே இறக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டிச்சென்றார்.
இச்சம்பவம் குறித்து, மயிலாப்பூர் போலீஸ்கார் சிலம்பரசன், அதே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், அந்த ஜோடி மீது, ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இருவரும், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் இருப்பது தெரியவந்தது. பெண் போலீசார் உதவியுடன், இவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், போதை ஆசாமி, சென்னை வேளச்சேரி மருதுபாண்டியன் தெருவை சேர்ந்த சந்திரமோகன், 42 என்பதும், அவர் நண்பருடன் சேர்ந்து, கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
அவருடன் நள்ளிரவில் அலப்பறையில் ஈடுபட்ட பெண், மயிலாப்பூரை சேர்ந்த தனலட்சுமி, 40 என்பதும், திருமணமாகி கல்லுாரியில் படிக்கும் இரு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோர், 10 ஆண்டுகள் தகாத உறவில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் பட்டினப்பாக்கம் லுாப் சாலையில், காரை நிறுத்தி மது குடிப்பது வாடிக்கை. சில தினங்களுக்கு முன் போலீசார் இருவரையும் எச்சரித்தும் அனுப்பி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின், சந்திரமோகன், தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் உதயநிதியை தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.