/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுரை சென்ற விமானத்தின் கண்ணாடி சேதம்: பயணியர் திக்... திக் பயணம்!
/
மதுரை சென்ற விமானத்தின் கண்ணாடி சேதம்: பயணியர் திக்... திக் பயணம்!
மதுரை சென்ற விமானத்தின் கண்ணாடி சேதம்: பயணியர் திக்... திக் பயணம்!
மதுரை சென்ற விமானத்தின் கண்ணாடி சேதம்: பயணியர் திக்... திக் பயணம்!
ADDED : அக் 12, 2025 03:02 AM

சென்னை:மதுரைக்கு புறப்பட்ட 'இண்டிகோ' விமானத்தின் கண்ணாடி திடீரென சேதமடைந்ததால், விமானம் தரையிறங்குவது வரை திக்... திக்... ஆக இருந்ததாக, பயணியர் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரைக்கு, நேற்று முன்தினம் இரவு 10:05 மணிக்கு, 'இண்டிகோ' விமானம் புறப்பட இருந்தது. இது ஏ.டி.ஆர்., வகை சிறிய ரக விமானம். இதில் பயணம் செய்ய 79 பேர் இருந்தனர்.
விமானம், இரவு 10:07 மணிக்கு சரியான நேரத்தில் புறப்பட்டது. சென்னை வான்வெளியில் நடுவானில் பறந்தபோது, விமானத்தின் முன் பக்க கண்ணாடியில், திடீரென கீறல் விழுந்தது.
சேதமடைந்த கண்ணாடியுடன் விமானத்தை இயக்கினால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், சுதாரித்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு தெரிவித்தார். அவர்கள் உடனடியாக, விமானத்தை தரையிறக்க அறிவுறுத்தினர்.
மேலும், விமானம் நிலைய 'ரன்வே'யில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. விமானம் இரவு 11:12 மணிக்கு, பத்திரமாக சென்னையில் தரையிறங்கியது. விமான தரையிறங்குவது வரை சி ல நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்டது.
உள்ளே இருந்த பயணியர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, ஓய்வறை பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். கண்ணாடியில் கீறல் விழுந்த விமானம் பழுது பார்க்கும் பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய சிவில் விமான போக்கு வரத்து இயக்குநரகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.