/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தையை கடத்திய பெண் கரூரில் கைது
/
குழந்தையை கடத்திய பெண் கரூரில் கைது
ADDED : நவ 18, 2024 02:43 AM

கண்ணகிநகர்,:கண்ணகிநகரை சேர்ந்த ஆரோக்கியதாஸ் மனைவி நிஷாந்தி, 30. பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லாத இவர்களுக்கு, ஒன்றறை மாதத்திற்குமுன், ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 13ம் தேதி, குழந்தை பெயரில், மாதம் 1,000 ரூபாய் அரசு உதவி தொகை வாங்கி தருவதாக, திருவேற்காடை சேர்ந்த தீபா, 26, கூறினார்.
இதை நம்பி அவருடன், நிஷாந்தி சென்றார். தி.நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட வைத்துவிட்டு, குழந்தையை தீபா கடத்தி சென்றார். கண்ணகி நகர் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
குழந்தைக்கு உடல்நிலை மோசமானதால், திருவேற்காடில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தீபா தலைமறைவானார். போலீசார், 15ம் தேதி, குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். போலீசார் தனிப்படை அமைத்து, தீபாவின் கணவரை பிடித்தனர். அவர் வாயிலாக தீபாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், கரூரில் உள்ள ஒரு உறவினர் வீட்டில், தீபா தலைமறைவாக இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார், கரூர் விரைந்து, தீபாவை கைது செய்து, நேற்று மாலை, சென்னை அழைத்து வந்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.