/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிபுரிந்த வீட்டில் திருடிய பெண் கைது
/
பணிபுரிந்த வீட்டில் திருடிய பெண் கைது
ADDED : ஜூன் 26, 2025 12:30 AM

சென்னை,
நொளம்பூரில், பணிபுரிந்த வீட்டில் திருட்டில் ஈடுபட்ட பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.
நொளம்பூர், அண்ணாமலை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜ், 65; ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர். கடந்த 23ம் தேதி, வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தபோது, 14 சவரன் நகை, 50,000 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்த புகாரையடுத்து, கண்காணிப்பு கேமராவை ஆய்வு நொளம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், ரங்கராஜ் வீட்டில் பணிபுரியும் ரிங்கு முகர்ஜி, 23, என்பவரை தவிர, வேறு யாரும் அவரது வீட்டிற்கு வந்து செல்லவில்லை என்பது தெரிய வந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நகை திருடியதை ஒப்புக்கொண்டார். நேற்று அவரை கைது செய்த போலீசார், 14 சவரன் நகை மற்றும் 10,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.