/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆசிட் குடித்து பெண் தற்கொலை முயற்சி

ADDED : ஏப் 24, 2025 12:12 AM
மதுரவாயல், மதுரவாயல், ஜானகி நகர் நான்காவது தெருவைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மகள் ஏஞ்சல்கெல்சியா, 23; அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து வீட்டிற்கு வந்தவர், நேராக அறைக்கு சென்றார்.
சிறிது நேரம் கழித்து குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அரை மயக்கத்தில் படுக்கையில் கிடந்தார். அருகில், கழிப்பறையை கழுவ பயன்படுத்தும் ஆசிட் பாட்டில் திறந்து கிடந்தது.
இதையடுத்து குடும்பத்தினர், ஏஞ்சல் கெல்சியாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார், ஏஞ்சல் கெல்சியாவிடம் விசாரித்தனர்.
அதில், வேலைக்குச் சென்ற ஏஞ்சல்கெல்சியா, ஆவடி அருகே சென்ற போது அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, போக்குவரத்து போலீசார் சோதனை செய்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாததால், வாகனத்தை பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்த பின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும்படி, போலீசார் கூறியுள்ளனர்.
இதில் மன உளைச்சல் அடைந்த ஏஞ்சல்கெல்சியா, அங்கிருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு வந்து தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும், போலீசார் விசாரிக்கின்றனர்.