ADDED : பிப் 04, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம், அரும்பாக்கம் பிரதான சாலையில், நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காதல் ஜோடி இடையே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த காதலன், வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்தி, காதலியை ஆபாசமாக பேசி, சரமாரியாக தாக்கினர். தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதால், அப்பெண் வலியால் அலறி துடித்தார்.
இதை பார்த்தோர், அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் காதல் ஜோடியை அரும்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
காதலி மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை தாக்கியது தெரியவந்தது. போலீசார் இருவருக்கும் அறிவுரை வழங்கி, எச்சரித்து அனுப்பினர்.