/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகை கடைகளில் கைவரிசை 'கில்லாடி' பெண் சிக்கினார்
/
நகை கடைகளில் கைவரிசை 'கில்லாடி' பெண் சிக்கினார்
ADDED : மே 03, 2025 11:56 PM

அமைந்தகரை,
அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 50. இவர், அதே பகுதியில் 'பத்மா ஸ்ரீ' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு, 24ம் தேதி இரவு, 45 வயதுடைய பெண் ஒருவர், தாலி கயிற்றில் கோர்க்கும், 35,000 ரூபாய் மதிப்பிலான 'ஞானகுழாய்கள்' வாங்கினார்.
ஞானகுழாய்க்கு அரக்கு போட்டு தரும்படி கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு, தங்க கம்பல் பார்க்க வேண்டும் எனக் கூறி, வேறு நகைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.
சில மணிநேரத்திற்கு பின், ஞானகுழாய் மட்டும் போதும் என வாங்கி சென்றார். கடைக்காரர் இரவு வழக்கம்போல், நகைகளை சோதித்தபோது, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 கிராம் 'ஆண்டிக்' தங்க கம்மல் ஜோடி ஒன்று, மாயமாகி இருப்பது தெரிந்தது.
உடனடியாக, கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், ஞானகுழாய் வாங்கிய பெண், ஊழியரின் கவனத்தை திசை திருப்பி திருடியது தெரிந்தது. இது குறித்து, அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார்.
போலீசாரின் விசாரணையில், பொழிச்சலுார், நேரு நகரைச் சேர்ந்த தாட்சயினி, 52, என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.