/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் சலசலப்பு
/
4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் சலசலப்பு
4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் சலசலப்பு
4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் சலசலப்பு
UPDATED : ஜூன் 24, 2025 07:51 AM
ADDED : ஜூன் 24, 2025 12:22 AM
தி.நகர், தி.நகரில் நான்காவது மாடியில் இருந்து குதித்து, தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தி.நகர், நானா தெருவில் நான்கு மாடி குடியிருப்பு உள்ளது. நேற்று மாலை 4:30 மணியளவில், இளம்பெண் ஒருவர் நான்காவது மாடியின் ஜன்னலில் அமர்ந்து, ஒரு காலை வெளியே போட்டவாறு, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை கண்ட பகுதிமக்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பாண்டிபஜார், மாம்பலம் போலீசார் மற்றும் தி.நகர் தீயணைப்பு வீரர்கள் அப்பெண்ணை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டிற்கு சென்றபோது, அப்பெண் தன் அறையை உள்தாழ்பாள் போட்டு விட்டு, ஜன்னல் வழியாக குதிக்க முற்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில், பாண்டிபஜார் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் மீரா, அப்பெண்ணின் பெற்றோரிடம் மொபைல் போன் எண்ணை வாங்கி, அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக பேசினார்.
பின், கதவை உடைத்து உள்ளே சென்று, அப்பெண்ணிடம் பேசி அவரை மீட்டார்.
அப்போது, அவர் கையை அறுத்துக் கொண்டதும் தெரியவந்தது. உடனே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற இளம்பெண், டேவினா, 28, என்பதும், காதல் தோல்வியால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தவர், தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.