ADDED : ஜூலை 16, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையம் அருகே, ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின்களை
கழற்றி இழுத்து செல்லும், 'சப்போர்ட் இன்ஜின்' அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று இரவு 9:00 மணியளவில், அந்த ரயில் இன்ஜின் மீது ஏறிய 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தார்.
இதை, அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்க்கவே, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர், இன்ஜின் மீது ஏறி நின்ற பெண்ணை கீழே இறக்கினர். முதற்கட்ட விசாரணையில், மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

