/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை
/
அரளி விதை அரைத்து குடித்து பெண் தற்கொலை
ADDED : ஏப் 25, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை,
படப்பை அருகே ஒரத்துார் பகுதியை சேர்ந்தவர் தேவி, 47. இவரது கணவர் ராஜேந்திரனை பிரிந்து சென்று, சுதாகர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், இரண்டாவது கணவருக்கும், தேவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், விஷத்தன்மையுடைய அரளி விதையை அரைத்து, நேற்று முன்தினம் இரவு, தேவி குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உறவினர்கள் தேவியை மீட்டு, கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், தேவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

