/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணமான 4வது மாதத்தில் பெண் பலி ராணுவ அதிகாரி கணவர் மீது புகார்
/
மணமான 4வது மாதத்தில் பெண் பலி ராணுவ அதிகாரி கணவர் மீது புகார்
மணமான 4வது மாதத்தில் பெண் பலி ராணுவ அதிகாரி கணவர் மீது புகார்
மணமான 4வது மாதத்தில் பெண் பலி ராணுவ அதிகாரி கணவர் மீது புகார்
ADDED : ஜூலை 08, 2025 12:28 AM
கோயம்பேடு, கோயம்பேடு இளம்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ராணுவ அதிகாரியான அவரது கணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகள் கவிதா, மகன் பூந்தமிழ்.தட்சணாமூர்த்தி சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:
என் மகள் கவிதாவிற்கு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ஓம்கணபதியின் மகன் நாகர்ஜுன் என்பவருடன், கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
மருத்துவரான நாகர்ஜுன், இந்திய ராணுவத்தில் மேஜராக உள்ளார். தற்போது மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம் நாகர்ஜுனின் தந்தை ஓம்கணபதி, என்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, கவிதாவின் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, ஜபல்பூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகளை காண சென்றேன். அங்கு, கோமா நிலையில் இருந்த கவிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின், பிரேத பரிசோதனை முடிந்து, உடலை திண்டுக்கல்லில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் சென்னை கொண்டு செல்வதற்கான, ஏற்பாட்டையும் மாப்பிள்ளை வீட்டார் செய்தனர்.
கவிதாவின் உடலை, சென்னை எடுத்து வந்து இறுதிச்சடங்கு செய்தோம். மாப்பிள்ளை வீட்டார் செயல்பாட்டில் சந்தேகம் உள்ளது. அத்துடன், மகளின் சாவில் மர்மமாக உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
புகார்தாரர் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து, ஜபல்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதால், உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.