நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு, அடையாறு, லோகநாதன் தோட்டத்தைச் சேர்ந்தவர் புஷ்பா, 60. இவர், நேற்று அதிகாலை பணிக்கு செல்ல, அடையாறு, எல்.பி., சாலையில் உள்ள தொலைத்தொடர்பு துறை அலுவலகம் எதிரே, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அடையாறில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற கார் மோதி, பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தோர் அவரை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர் களின் பரிசோதனையில் புஷ்பா இறந்தது தெரிய வந்தது.
வழக்கு பதிந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான ராஜாமுகமது, 45, என்பவரை கைது செய்தனர்.