ADDED : ஜன 12, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிக்கரணை:சென்னை பள்ளிகரணை, செல்வம் நகரை சேர்ந்தவர் ரேவதி, 66. இவர், நேற்று காலை, பள்ளிகரணை- - வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். கோவில் அருகே சாலையை கடந்தபோது, மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற இருசக்கர வாகனம், எதிர்பாரதவிதமாக அவர் மீது மோதியது.
பலத்த காயம் அடைந்த ரேவதியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமணையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த செம்பாக்கம், முத்துமணிநகரை சேர்ந்த ஐ.டி., ஊழியர் மனோஜ், 28 என்பவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.