ADDED : டிச 08, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு,நெற்குன்றம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்நத்வர் பரத், 24. இவரது மனைவி லதா, 20. இருவரும் நேற்று முன்தினம் இரவு நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது, மதுரவாயலில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டர், லதா மீது மோதியது.
இதில், துாக்கி வீசப்பட்ட லதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஸ்கூட்டர் ஓட்டி வந்த, விருகம்பாக்கத்தை சேர்ந்த சங்கர் தினேஷ், 22 என்பவரும் காயமடைந்தார். இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், லதா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.