/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குக்கர் வெடித்ததில் விபரீதம் திருவொற்றியூரில் பெண் பலி
/
குக்கர் வெடித்ததில் விபரீதம் திருவொற்றியூரில் பெண் பலி
குக்கர் வெடித்ததில் விபரீதம் திருவொற்றியூரில் பெண் பலி
குக்கர் வெடித்ததில் விபரீதம் திருவொற்றியூரில் பெண் பலி
ADDED : ஜூலை 13, 2025 12:15 AM

திருவொற்றியூர் திருவொற்றியூரில், குக்கர் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவொற்றியூர் சரவணா நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம், 62. இவரது மனைவி ராஜலட்சுமி, 55. இவர்களுக்கு யுவராஜ் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி சென்று விட்டார்.
இந்நிலையில், யுவராஜ் தன் வீட்டில் பழுதான, 'ஏசி'யை சரிபார்க்க, நண்பர் ஒருவரை நேற்று மதியம் 1:30 மணியளவில் அழைத்து வந்தார். நண்பருக்கு மதிய சாப்பாடு தயார் செய்யும்படி, தாய் ராஜலட்சுமியிடம் கூறியுள்ளார்.
அதன்படி, ராஜலட்சுமி சிறிய குக்கர் ஒன்றில் சாப்பாடு வைத்தார். குக்கரில் விசில் வரவில்லை. சந்தேகமடைந்தவர் குக்கர் அருகே சென்று பார்த்தபோது, திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதில், குக்கரின் மூடி, ராஜலட்சுமியின் முகத்தில் பட்டு, அவர் பின்புறமாக விழுந்தார். படுகாயமடைந்தவரை, மகன் யுவராஜ், அவரது நண்பர் ஆகியோர் மீட்டு, திருவொற்றியூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜலட்சுமி உயிரிழந்தார்.