/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகைக்கு பணம் பெற்று மோசடி; கடை மேலாளர் மீது பெண் புகார்
/
நகைக்கு பணம் பெற்று மோசடி; கடை மேலாளர் மீது பெண் புகார்
நகைக்கு பணம் பெற்று மோசடி; கடை மேலாளர் மீது பெண் புகார்
நகைக்கு பணம் பெற்று மோசடி; கடை மேலாளர் மீது பெண் புகார்
ADDED : டிச 23, 2024 06:40 AM
செம்பியம்: கொளத்துார், பூம்புகார் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் ராஜகுமாரி, 36; வழக்கறிஞர்.
இவர், பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில், நகைகளை வாங்கி வந்துள்ளார். அப்போது, கிளை மேலாளர் ரிச்சர்ட் எதிந்திர் சிங் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
தன் பெயரில் நகை வாங்கினால், 20 முதல் 30 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என, ரிச்சர்ட் கூறியதாக தெரிகிறது. அதை நம்பி, கடந்த 2021ம் ஆண்டு, 10 லட்சம் ரூபாய் ராஜகுமாரி வழங்கியதாக கூறப்படுகிறது.
'ரிச்சர்ட் பணத்தை பெற்று கொண்டு, நகையை தராமலும், பணத்தை திரும்பி கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ராஜகுமாரி அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.