/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் பலி; ஒருவர் காயம்
/
ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் பலி; ஒருவர் காயம்
ADDED : நவ 21, 2025 04:38 AM
கோயம்பேடு: இ ருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், பெண் உயிரிழந்தார்.
நெற்குன்றம், பாண்டியன் தெருவை சேர்ந்தவர் கல்பனா, 32. இவர், தன் உறவினர் பெண் திவ்யா, 27, என்பவருடன், நேற்று திருமங்கலத்தில் உள்ள துணிக்கடைக்கு, 'டி.வி.எஸ்., ஜூபிட்டர்' இருசக்கர வாகனத்தில் சென்று, கோயம்பேடு நோக்கி வந்தனர்.
அப்போது, மதுரவாயல் செல்ல மேம்பாலத்தில் ஏறிய போது, பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில், ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து வந்த திவ்யா தடுமாறி விழுந்தார். அவரது இடது காலில் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. கல்பனாவிற்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், திவ்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய மும்பையை சேர்ந்த லாரி ஓட் டுநர் ராஜ்பகதுார், 40, என்பவரை கைது செய்தனர்.

