/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்டேஷனில் புகுந்து போலீசை தாக்கிய பெண் வக்கீல்
/
ஸ்டேஷனில் புகுந்து போலீசை தாக்கிய பெண் வக்கீல்
ADDED : செப் 20, 2024 12:41 AM
சென்னை, ஆயிரம்விளக்கு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சங்கவி, 27. இவர், மாம்பலம் காவல் நிலையத்தில், இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது பெண் ஒருவர் வந்துள்ளார்.
திடீரென, சங்கவியை ஆபாசமாக பேசி தாக்கியதுடன், மேஜையில் இருந்த கணினியை கீழே தள்ளி, ஆவணங்களை கிழித்து எறிந்துள்ளார். உடனே, இது குறித்து சங்கவி சக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் விஜயன், பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். இதில், தி.நகரைச் சேர்ந்த இன்சியா பிரவீன் இக்பால், 30, வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெற்றோர் இறந்த நிலையில், தனிமையில் வசித்து வந்துள்ளார். இதனால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, விசாரித்து வருகின்றனர்.