/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் போலீசிடம் வழிப்பறி வாலிபருக்கு தர்ம அடி
/
பெண் போலீசிடம் வழிப்பறி வாலிபருக்கு தர்ம அடி
ADDED : பிப் 17, 2025 01:19 AM
பழவந்தாங்கல்: சென்னை, பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் பரணி, 25, எழும்பூரில் உள்ள நுண்ணறிவு கணினி பிரிவில், காவலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, பணி முடித்து, மின்சார ரயிலில் பழவந்தாங்கல் ரயில் நிலையம் சென்றார். அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த மர்ம நபர், பரணி அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்து தப்ப முயன்றார். பரணி கூச்சலிடவே, அதே ரயிலில் வந்த மற்ற பயணியர் ஓடிவந்து, செயின் பறித்த நபரை மடக்கி பிடித்தனர்.
பின், தர்ம அடிகொடுத்து, ரோந்து பணியில் இருந்த ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாம்பலம் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், சிட்லபாக்கத்தை சேர்ந்த சத்தியபாலு, 40, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.