/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் அரிசியில் இட்லி மாவு பெண்ணிடம் விசாரணை
/
ரேஷன் அரிசியில் இட்லி மாவு பெண்ணிடம் விசாரணை
ADDED : பிப் 14, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி ஓட்டேரி அருகே கொசப்பேட்டை, கந்தசாமி கோவில் தெரு பகுதியில், ரேஷன் அரிசியில் இட்லி மாவு தயாரித்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், கொசப்பேட்டையைச் சேர்ந்த உஷா, 45, என்பவர் விதிமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 322 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மாவு அரைக்கும் இயந்திரம், பேக்கிங் இயந்திரம் உள்ளிட்டவற்றை கண்டறிந்தனர்.
இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தையும், போலீசார் அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். உஷாவிடம் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

