ADDED : பிப் 26, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி, கீழாந்துாரைச் சேர்ந்தவர் லதா, 50. இவர், தாய் செல்வராணி, 71, உடன் வசித்துவந்தார். லதாவிற்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை லதாவுக்கும், அவரது தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. லதா உருட்டுக்கட்டையால், தாயை தாக்கி அங்கிருந்து தப்பியோடினார். செல்வராணியை, பகுதிவாசிகள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், நேற்று காலை திருத்தணி, அருந்ததிபாளையம் அருகே, ஒரு மரத்தில், லதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்து, லதா தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

