/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்வாயில் பெண் உடல் அம்பத்துாரில் மர்மம்
/
கால்வாயில் பெண் உடல் அம்பத்துாரில் மர்மம்
ADDED : ஜூன் 30, 2025 04:01 AM

அம்பத்துார்:அம்பத்துாரில், கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.
அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே, மாதவரம் -- வண்டலுார் நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் உள்ள, 6 அடி ஆழமுள்ள மழைநீர் கால்வாயில், இறந்த நிலையில் பெண் ஒருவரது உடல் கிடப்பதாக, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணிற்கு 40 வயது இருக்கலாம் எனவும், இரண்டு நாட்களுக்கு முன், கால்வாயில் விழுந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்து வீசி சென்றனரா என்ற கோணங்களில், போலீசார் விசாரிக்கின்றனர்.