ADDED : ஏப் 12, 2025 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர்:திருவான்மியூர், பெரியார் நகரை சேர்ந்தவர் வேலம்மாள், 70. இவர், நேற்று முன்தினம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் சென்றார்.
இரவு அன்னதானம் வழங்கும் கூட்டத்திற்கு இடையில் சென்றபோது, அவர் அணிந்திருந்த, 6 சவரன் நகை மாயமானது.
அதுகுறித்த புகாரின்படி, திருவான்மியூர் போலீசார், திருடப்பட்டதா அல்லது கழன்று விழுந்ததா என, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

